கண்டி கலாஹா வைத்தியசாலையில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
குறித்த சம்பவத்துக்கு பிறகு வைத்தியசாலை வளாகம் ஒரு யுத்த களமாக காட்சியளித்ததை காணக்கூடியதாக இருந்தது.
இது ஒன்றும் இன்று அந்த குழந்தை இறந்தமையினால் மற்றும் மக்களுக்கு வந்த கோபம் அல்ல,நீண்ட நாட்களாக மக்களுக்கு இருந்த மனக்குமுறலே அது.
இது ஒன்றும் இன்று அந்த குழந்தை இறந்தமையினால் மற்றும் மக்களுக்கு வந்த கோபம் அல்ல,நீண்ட நாட்களாக மக்களுக்கு இருந்த மனக்குமுறலே அது.
மலையகத்தில் இருக்கும் வைத்தியசாலைகளில் பெரும்பாலான வைத்திசாலைகளில் நோயாளிகள் ,அவசர சிகிச்சைகளுக்கு போகின்றவர்கள் சரியாக கவனிக்கப்படாமல் ,அல்லது வைத்திய சாலை வைத்தியர் உட்பட ஊழியர்களும் தோட்ட மக்களுக்காக அவர்கள் முழுமையான சேவையை வழங்க தயார் நிலையில் எப்பொழுதுமே இருப்பது இல்லை, என்பதே இப்படியான சம்பவங்கள் நடப்பதற்கு முக்கியமான காரணங்களாகும்.
மேலும் மலையக வைத்திசாலைகளில் உள்ளவர்களின் கவனயீனம் காரணமாக.குறித்த சிறுமி மாத்திரம் அல்ல இன்னும் பல உயிர்களை காவு கொல்லப்பட்டிருக்கின்றன என்பது தொடர்பாக கடந்த காலங்களில் பல பதிவுகளை நாம் அவதானித்திருகின்றோம். குறிப்பாக லிந்துலை, .மன்றாசி போன்ற வைத்தியசாலைகள் தொடர்பாகவும் ,மேலும் கிளங்கன் வைத்திய சாலையிலும் மக்கள் பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்கின்றார்கள் என்பது தொடர்பாகவும் பல தகவல்கள் இன்றும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.










